சூடான செய்திகள் 1

வனப் பிரதேசத்தை பாதுகாப்பதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது

(UTV|COLOMBO)-பேண்தகு அபிவிருத்தி இலக்கினை அடைந்து கொள்வதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக இலங்கை அதன் தற்போதைய வனப் பிரதேசத்தை பாதுகாப்பதற்கும் அதனை 32 வீதமாக அதிகரிப்பதற்கும் சிறந்த நடைமுறைகளை பின்பற்றுவதற்கு மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

உலக வன வாரத்தை முன்னிட்டு நடைபெறும் உலக வனப் பாதுகாப்பு குழுவின் 24 ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இம்மாநாடு ரோமில் உள்ள ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய தாபனத்தின் தலைமை அலுவலகத்தில் நேற்று  (16) முற்பகல் ஆரம்பமானது.

இந்த மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி, காடுகள் அடிப்படை மனிதத் தேவைகளான உணவு, சக்தி வளம் மற்றும் உறைவிடம் உள்ளிட்ட பல்வேறு சமூக பொருளாதார நன்மைகளை வழங்குகின்றன எனக் குறிப்பிட்டதுடன், இந்த தேவைகளையும் ஏனைய தேவைகளையும் அடைந்துகொள்வதற்கு உதவுகின்ற உற்பத்திகள் மற்றும் சேவைகளை நிலையாக பேணுவதற்கு காடுகள் பேண்தகு அடிப்படையில் முகாமைத்துவம் செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

பூகோள வனத்துறையின் முன்னேற்றத்திற்கான தீர்மானங்களை மேற்கொள்ளவும் அது தொடர்பான அறிவை பகிர்ந்துகொள்ளவும் மேலும் கலந்துரையாடல், விவாதங்களை மேற்கொள்ளவும் வனப்பாதுகாப்பு தொடர்பான இந்த மாநாடு ஒரு சிறந்த தளமாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இனி வருகின்ற நிகழ்ச்சி நிரல் விரிவானதாகவும் சவால் மிக்கதாகவும் இருந்த போதும் அதனை வெற்றிகொள்வதற்கு அனைத்து நாடுகளும் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் 50 வீதத்திற்கும் மேற்பட்ட பகுதிகள் வனப் பிரதேசங்களாகவே இருந்து வந்துள்ளன என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தற்போது நாட்டின் மொத்த வன அடர்த்தியானது மொத்த நிலப்பிரதேசத்தில் 29 வீதமாக குறைவடைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

பாரியளவிலான விவசாய முயற்சிகள் மற்றும் குடியேற்றங்களுக்காக காணிகள் பயன்படுத்துவதால் காடுகள் அழிக்கப்பட்டதன் காரணமாக நாட்டின் வனப் பிரதேசம் குறைந்து வருகின்றது என்றும் இதன் காரணமாக பல சூழல் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கவேண்டி ஏற்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மீள்காடாக்கல் அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, 2020 ஆம் ஆண்டாகும்போது நாட்டில் ஐந்து மில்லியன் மரங்களை நடும் திட்டம், சூழலையும் நீர் நிலைகளையும் பாதுகாக்கின்ற வகையில், கடல்மட்டத்திலிருந்து 5,000 அடி உயர நிலப்பகுதியில் இருக்கின்ற மரங்களை வெட்டுவதை தடை செய்தல் மற்றும் அனைத்து பாடசாலை பிள்ளைகளும் குறைந்தது ஒரு மரக்கன்றை நாட்டுவதற்கு ஊக்குவிக்கின்ற நிகழ்ச்சித்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அபிவிருத்தி தாபனம் இலங்கைக்கு தொடர்ச்சியாக வழங்கிவரும் உதவிகளுக்கு ஜனாதிபதி அவர்கள் நன்றி தெரிவித்தார்.

பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்கு காடுகளின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய தாபனத்தினால் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் José Graziano da Silva இந்த மாநாட்டில் உரையாற்றும்போது உறுப்பு நாடுகளுக்கு பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்கு உதவுவது தமது அமைப்பின் நோக்கமாகுமென்று தெரிவித்தார்.

உலக வன பாதுகாப்பு குழுவுக்கான நிகழ்ச்சி நிரல் 2016 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதுடன், அந்நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு அந்நோக்கங்களை அடைந்துகொள்வதற்காக உறுப்பு நாடுகளுக்கு முடியுமான உதவிகளை வழங்கி வருவதாக பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

சுற்றாடலை பாதுகாப்பதற்கு மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் தலைவர் என்ற வகையில், இந்த மாநாட்டில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்குபற்றுவதை பணிப்பாளர் நாயகம் பாராட்டினார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

25 மில்லியன் ரூபா ஹெரோயினுடன் ஒருவர் கைது

பெருந்தோட்ட பகுதிகளுக்கென புதிய கிராம அபிவிருத்தி அதிகார சபை

ஜூலை மாதத்தில் யூரோ-4 எரிபொருள் இலங்கை சந்தையில்