உள்நாடு

வனசீவராசிகள் அமைச்சரின் வாகனம் மோதியதில் ஒருவர் பலி [VIDEO]

(UTV|கொழும்பு) – திருகோணமலை வீதி கஹடகஸ்கதிகிலிய – ரன்பன்வில பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சுற்றாடல் மற்றும் வனசீவராசிகள் வளங்கள் அமைச்சர் மற்றும் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேனவுடைய சொகுசு வாகனத்துடன், மோட்டார் சைக்கிள் மோதுண்டு குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

வாகன விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி மற்றும் அவரது மனைவி மற்றும் மகள் கஹாடகஸ்திகிலிய  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 35 வயதுடைய மோட்டார் சைக்கிள் சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய ஜீப் ரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கஹாடகஸ்திகிலிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வயல் பிரதேசங்களை நேரில் சென்று பார்வையிட்டார் அஷ்ரப் தாஹிர் எம்.பி

editor

தொலைத்தொடர்பு திருத்தச் சட்டம் நிறைவேறியது.

இன்றைய தினம் மின்வெட்டு அமுலாகாது