உள்நாடு

வந்தார் ஐயா : நாளை மறுதினம் பெயர் பதிவாகும்

(UTV | கொழும்பு) –   ஐக்கிய தேசியக் கட்சி தேசிய பட்டியல் உறுப்பினராக பெயரிடப்பட்டுள்ள அக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பெயர் எதிர்வரும் 18 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தலில் உள்ளடக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தவிசாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

கடந்த 2020 ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி ஆசனம் எதனையும் பெற்றிருக்கவில்லை.

எனினும், கட்சி பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகளின் அடிப்படையில் அக்கட்சிக்கு தேசியப்பட்டியல் ஊடாக ஒரு ஆசனம் கிடைத்திருந்த நிலையில் சுமார் 10 மாதங்களின் பின்னர் கட்சித்த தலைவர் ரணில் விக்ரமசிங்க தேசிய பட்டியல் உறுப்பினராக பெயரிடப்பட்டுள்ளார்.

Related posts

ரஞ்சன் ராமநாயக்க சற்று முன்னர் கைது

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

உள்ளூராட்சிமன்ற தேர்தல் வேட்பாளர்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளருடன் கலந்துரையாடல் – பிரசன்ன ரணதுங்க