உள்நாடு

வதிவிட உறுதிப்படுத்தல் ; புதிய நடைமுறை

(UTVNEWS | COLOMBO) – வதிவிடத்தை உறுதிபடுத்துவதற்காக கிராம சேவையாளரின் ஊடாக வழங்கப்படும் சான்றிதழ் இனிமேல் பிரதேச செயலாளரின் ஊடாக உறுதிபடுத்தப்படாது என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.


அற்கமைய வதிவிடத்தை உறுதிப்படுத்த இனிமேல் கிராம சேவையாளரின் ஊடாக வழங்கப்படும் சான்றிதழ் மாத்திரம் போதுமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமையவே இந்த நடைமுறை பின்பற்றப்படுவதாக தெரிவித்த அவர் மக்களுக்கு இலகுவான சேவையை வழங்கும் நோக்குடனேயே அரச பொது நிர்வாக அமைச்சினால் இந்த புதிய நடைமுறை பின்பற்றப்படுவதாக அவர் தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அரச பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

ரிஷாத்தினால் ரீட் மனு தாக்கல்

ஆர்ப்பாட்டம் காரணமாக பாரிய போக்குவரத்து நெரிசல்

செவ்வாயன்று ரயில் கட்டணங்களில் திருத்தம்