சூடான செய்திகள் 1

வணிக மாநாட்டில் ஜனாதிபதி இன்று விசேட உரை

(UTV|COLOMBO)-பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களுக்கான மாநாட்டினையொட்டி இடம் பெறும் வணிக மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பிரதான உரையாற்றவுள்ளார்

நிலையான அபிவிருத்திகான இலக்கினை அடைவது தொடர்பில் இன்று இடம்பெறவுள்ள மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றவுள்ளார்.

பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களுக்கான மாநாட்டினையொட்டி இடம் பெறும் வணிக மாநாட்டு இன்று ஆரம்பமாகவுள்ளது.

நிலையான அபிவிருத்திகான இலக்கினை அடைவது தொடர்பில் இன்றைய மாநாட்டில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி நேற்றைய தினம் பிரித்தானியாவின் பிரதி ஆணையாளர் நாயகத்தை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

லண்டன் நகரில் நடைபெறும் 26 ஆவது பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரித்தானியாவிற்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எதிர் வரும் 21 ஆம் திகதி வரை பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு நடைபெறும் அதே வேளை இளைஞர், மகளிர் மற்றும் வர்த்தக மாநாடுகளும் இடம்பெறவுள்ளன.

பொதுநலவாய விளையாட்டு மாநாட்டில் பங்கேற்வுள்ள ஜனாதிபதி மைத்திரபாலசிறிசேன அதன் பின்னர் பிரித்தானிய மகா ராணியின் 92 ஆவது பிறந்த தின நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஶ்ரீலங்கன் எயார்லைன்சின் தலைவர் இராஜினாமா

கூட்டு எதிர்கட்சியின் விஷேட கலந்துரையாடல் நாளை

சூடுபிடிக்கும் அரசியல் – மஹிந்தவை சந்தித்த தம்மிக்க.