உள்நாடு

வணக்கஸ்த்தலங்களில் அரசியல் கூட்டம்  நடத்த தடை

(UTV|கொழும்பு) – நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் நாட்டில் தேர்தல் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

1981 இலக்கம் 1 தேர்தல் சட்டத்தில், வணக்கஸ்த்தலங்களில் அரசியல் கூட்டம் மற்றும் அரசியல் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சமய நிகழ்வுகளின் போது கட்சி உறுப்பினர்களை ஊக்குவிக்கும் செயற்பாடு முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நாள் முதல் தேர்தல் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

Related posts

ட்ரோன் கமரா கண்காணிப்பில் 7 பேர் கைது

யாழில் மீனவ அமைப்புகள் போராட்டம் – கடுமையான பாதுகாப்பு வழங்கிய பொலிஸார்

editor

கடமைகளை மீண்டும் தொடங்குவது தொடர்பில் திங்கள் தீர்மானம்