சூடான செய்திகள் 1

வட மேல் மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் மூடப்பட்டன

(UTV|COLOMBO)இன்று (14) வட மேல் மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும்  மூடப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

வட மேல் மாகாணத்தில் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், நாட்டின் ஏனைய பாடசாலைகள் வழமை போன்று இயங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Related posts

கனடா கொலை சம்பவம்: தவறுகளை ஏற்றுக்கொண்ட பொலிஸ் தரப்பு

203 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

பொதுத் தேர்தலில் ஸ்ரீ.சு.க மற்றும் ஸ்ரீ.பொ.மு கதிரை சின்னத்தில்