உள்நாடு

வட மாகாணம் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிப்பு

(UTVNEWS | கொவிட் – 19) -வடக்கில் கொரோனா வைரஸ் தொற்று சமூகப் பரவலாக இல்லை. ஓரளவு பாதுக்கப்பாகவே வட மாகாணம் உள்ளது என்று யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இன்று யாழ்பபாண போதனா வைத்தியசாலையில் நடத்திய ஊடகவியளாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், கொரோனா தொற்றில் அதிகமானவர்கள் தொற்றிற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தாதவர்களாக இருந்திருப்பார்கள். ஆனால் நோய்க் காவிகளாக இருப்பார்கள். இதில் எல்லோரும் அவதானமாக இருக்க வேண்டும்.

எனினும், ஊரடங்கு நிலவரம் மற்றும் கொரோனாவின் எதிர்காலம் பற்றி தெளிவாக கூற முடியாது. இது உலகளாவிய தொற்று நோய் என்றும் தெரிவித்தார்.

Related posts

பிரதான 14 உற்பத்திகளுக்கான உத்தரவாத விலை நிர்ணயம்

தொடர்ந்தும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2014 ஆக உயர்வு