வகைப்படுத்தப்படாத

வட கொரியாவுக்கு ஐ.நா பாதுகாப்பு சபை கடும் கண்டனம்

(UDHAYAM, COLOMBO) – தொடர்ந்தும் ஏவுகணை பரிசோதனைகளை மேற்கொண்டு வரும் வட கொரியாவுக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

வட கொரியா ஜனாதிபதி, அணு ஆயுதங்களையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் நவீனரக ஏவுகணைகளையும் தொடர்ந்து பரிசோதித்து வருகிறார்.

இந்தநிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நான்கு ஏவுகணைகள் வடகொரியாவினால் பரிசோதிக்கப்பட்டது.

இந்த ஏவுகணைகளில் மூன்று ஜப்பான் கடல் பகுதியில் வீழ்ந்ததாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

சுமார் ஆயிரம் கிலோமீட்டர் வரை பாயும் திறன் கொண்ட குறித்த ஏவுகணைகள் குறித்த இலக்கை எட்டியதாகவும் செய்திகள் வெளியாகின.

ஜப்பானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை தாக்குவதற்கான ஒத்திகையாகவே இந்த ஏவுகணை பரிசோதனை நடத்தப்பட்டதாக வட கொரியா தெரிவித்திருந்தது.

இதனையடுத்தே, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை, உலக நாடுகளின் தடையை மீறி குறித்த ஏவுகணைகளை பரிசோதித்து வருவதாக வடகொரியா மீது கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.

Related posts

மெக்சிகோ பட்டாசு சந்தையில் வெடி விபத்து

ஆப்கானிஸ்தான் – தற்கொலைப்படை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரிப்பு

திடீரென பாதையில் ஓடிய குழந்தைக்கு மேலாக இரண்டு கெப் வண்டிகள் சென்ற பயங்கர சம்பவம் – காணொளி