வகைப்படுத்தப்படாத

வட இந்தியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

(UDHAYAM, NEW DELHI) – டெல்லி உட்பட வடஇந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது.

வடஇந்தியாவில் உத்தரகாண்ட் உட்பட பல இடங்களில் லேசான நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 5.8-ஆக பதிவான இந்த நிலநடுக்கம் டெல்லியிலும் உணரப்பட்டது. நேற்று இரவு சுமார் 10.33 மணிக்கு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

உத்தரகாண்ட் மாநிலத்தின் ருத்ரபிரயாக் மாவட்டத்தை மையமாகக் கொண்டு உருவான இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் சுமார் 33 கிலோமீட்டர் ஆழத்தில் உருவாகியதாக தேசிய நிலஅதிர்வு செயலகத்தின் தலைவர் ஜே.எல்.கவுதம் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் உள்ளிட்ட வடஇந்தியாவின் பல பகுதிகளிலும் உணரப்பட்ட இந்த நிலஅதிர்வால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

குறிப்பாக ஹரியானாவின் குர்குராம், பரிதாபாத், ரோத்தக், அம்பாலா, பஞ்ச்குலா, சோனிபேட், பானிபேட், கர்னல் உள்ளிட்ட பல பகுதிகளில் வீடுகள் குலுங்கியதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். மேலும் உத்தரப்பிரதேசத்தின் நொய்டா குடியிருப்பு பகுதியிலும் கட்டிடங்கள் குலுங்கின.

அதனைத்தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்புப்படையை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.

இந்த நிலஅதிர்வால் ஏற்பட்ட உயிரிழப்பு, மற்ற சேதங்கள் குறித்த உடனடி தகவல்கள் ஏதும் இல்லை.

இமயமலையின் எல்லை பகுதியில் அமைந்துள்ள உத்தரகாண்ட் மாநிலத்தில் அதிகளவில் நிலஅதிர்வு ஏற்படுவது இங்கேகுறிப்பிடத்தக்கது.

Related posts

Libya migrants: UN says attack could be war crime

கேரளாவில் கடும் மழை – உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

தென் தமிழகத்தில் கடல் பகுதிகளில் கடல் சீற்றம்