வகைப்படுத்தப்படாத

வடமாகாண புனர்வாழ்வு,அபிவிருத்திப் பணிகளில் அமெரிக்க காங்கிரஸ் திருப்த்தி

(UDHAYAM, COLOMBO) – நல்லாட்சி அரசாங்கத்தினால் யுத்தத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட  மக்களுக்கான வடமாகாண புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்திப் பணிகள் திருப்திகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமெரிக்க காங்கிரஸ் சபையின் பிரதிநிதி பில் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க காங்கிரஸ் சபை பிரதிநிதிகள்  நேற்று முன்தினம் நிதியமைச்சில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவை சந்தித்தனர்.

இந்த சந்திப்பின்போது  வடக்கு மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்ய நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்து முன்னேற்றகரமான முறையில் செயற்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தற்போதைய நல்லாட்சியின் கீழ் கடந்த இரண்டு வருடங்களுக்குள் இலங்கை பொருளாதார ரீதியில் ஸ்திர நிலையை அடைந்துள்ளது.. இரண்டு பிரதான அரசியல் கட்சிகள் சேர்ந்து நாட்டை ஆட்சி செய்வது விசேட அம்சமாகும் இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளதாகவும், தேசிய அரசாங்கத்தின் பொருளாதார முனைப்புக்கள் வரவேற்கப்பட வேண்டியது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்த நிகழ்வில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அத்துல் கேஷப்பும்  கலந்துகொண்டார்.

 

Related posts

இயற்கை தொடர்பான ஆழமான உணர்வின்மையே அனர்த்தத்திற்கு காரணம் – பிரதமர்

යල කන්නයේ වගා හානි වන්දි සඳහා රුපියල් මිලියන පන්සිය පනස් හයක්

தந்தை செல்வாவின் 40ஆவது ஆண்டு நினைவு தினம் கொழும்பில் : அமைச்சர் ராஜித நினைவுப்பேருரை