சூடான செய்திகள் 1

வடமாகாண ஆளுநர் தலைமையில் முல்லைத்தீவு காணிப்பிரச்சினை தொடர்பில் ஆராயும் கூட்டம்

UTV | COLOMBO – முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் காணிப்பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கூட்டம் ஒன்று மாவட்ட செயலத்தில் நேற்று இடம்பெற்றது.

வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தலைமையில் இந்த கூட்டம் இடம்பெற்றது.

இதில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருபது காணி முறைப்பாட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 12 பேர் விசாரணைக்கு சமூகமளித்திருந்ததாக எமது செய்தி தொடர்பாளர் சண்முகம் தவசீலன் தெரிவித்துள்ளார்.

இதில் 7 பேரின் காணிப்பிணக்குகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன.

இதுதவிர, 22 பேர் புதிதாக தங்களது காணி முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகள் இந்த கூட்டத்திற்கு சமூகமளிக்காததன் காரணத்தால் ஏனைய காணிப் பிரச்சினைகளுக்கு தனித்து தீர்வுகள் பெற்று கொடுக்க முடியாமல் போனதாக வடமாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Related posts

அரச நிறுவனங்களின் வைபவங்களுக்கு ஹோட்டல்களை உபயோகிக்க தடை.

நீர்த்தேங்கங்களின் நீர் மட்டம் அதிகரிப்பு…

ஆனமடுவ உணவக தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது