புகைப்படங்கள்

மத்திய அதிவேக நெடுஞ்சாலைக்கு பிரதமர் கண்காணிப்பு விஜயம்

(UTV|கொழும்பு)- வடக்கு மத்திய அதிவேகப் பாதையின் முன்னேற்றத்தினைப் பிரதம அமைச்சர் பார்வையிட்டார்

மத்திய அதிவேகப் பாதையின் கருத்திட்டப் பணிப்பாளர் கே.எச்.எம்.ஏ.கே.கொஹெல்எல்ல, மத்திய அதிவேகப் பாதை நிர்மாணப் பணிகளின் தற்போதைய நிலைமை தொடர்பாக பிரதம அமைச்சருக்கு நீண்ட விளக்கமொன்றை வழங்கினார்.

ஐந்து ஒழுங்கைகள் மற்றும் ஆறு இடைப் பரிமாற்ற மத்திய நிலையங்களைக் கொண்டதாக நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட மத்திய அதிவேகப் பாதையின் இரண்டாவது கட்ட நிர்மாணப் பணிகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தக் காலம் 30 மாதங்களாகும்.

உரிய முறையில் காணிகளைக் கையகப்படுத்தாமல் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டமை இந்தக் கருத்திட்டம் தாமதமடைவதற்குப் பிரதான காரணமாகும் என இதன்போது கருத்திட்டப் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

இதன்போது, பெருந்தெருக்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பிரணாந்து அவர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார அவர்கள், வடக்கு மத்திய அதிவேகப் பாதையின் கருத்திட்டப் பொறியியலாளர்கள் மற்றும் ஒப்பந்த நிறுவனங்களின் அதிகாரிகளும் கலந்துக்கொண்டனர்.

 

Related posts

மீன்வளர்ப்பு ஆராய்ச்சி மையம் திறப்பு

இலங்கை ஒன்றும் துருக்கியிடம் சளைத்தவர்கள் அல்ல..

UTV குழுமத்தின் பொங்கல்