வகைப்படுத்தப்படாத

வடக்கில் அடையாளம் காணப்படாத காய்ச்சல்

(UTV|JAFFNA)-யாழ்ப்பாணத்தில் பரவும் ஒருவித காய்ச்சல் 8 வயது சிறுவன் ஒருவன் இன்று உயிரிழந்துள்ளதாக யாழ் வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடுப்பிடி பகுதியைச் சேர்ந்த இவர் கடந்த 23ம் திகதி மாந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர், யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிறுவன் உயிரிழந்துள்ளான்.

கடந்த மூன்று மாதங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 9 பேரும் யாழில் 11 பேரும் உரிய முறையில் அடையாளம் காணப்படாத ஒருவகை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விடயம் குறித்து ஆராய கொழும்பில் இருந்து விஷேட வைத்தியக் குழுவொன்று முல்லைத்தீவு நோக்கி சென்றுள்ளது. எனினும், இந்த காய்ச்சல் குறித்து இதுவரை உரிய முறையில் அடையாளம் காணப்பட்டு மக்களுக்கு விளக்கமளிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கலிபோனியாவில் ஐவர் சுட்டுக்கொலை

ஜனாதிபதி மஹாநாயக்க தேரர்கள் இன்று சந்திப்பு

குழந்தையை மடியில் வைத்தபடி தேர்வு எழுதிய பல்கலைக்கழக மாணவி