உள்நாடு

வடக்கிற்கான புகையிரத சேவையில் பாதிப்பு

(UTV | கொழும்பு) – வடக்கிற்கான புகையிரத சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று அதிகாலை 3.45 மணியளவில் காங்கேசந்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ஸ்ரீ தேவி புகையிரதத்தில் காட்டு யானை ஒன்று மோதுண்டதன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்து மாங்குளம் மற்றும் புளியங்குளம் இடையே ஏற்பட்டதாக புகையிரத கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக குறித்த பகுதியில் ரயில் தடம்புரண்டுள்ளதாகவும் புகையிரத கட்டுப்பாட்டு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related posts

மினுவாங்கொடை தொழிற்சாலையில் இதுவரையில் 832 பேருக்கு கொரோனா

சபாநாயகர் சர்வதிகார போக்கு? நடவடிக்கைக்கு தயாராகும் எதிர்க்கட்சி!!

தனிமைப்படுத்தல் மற்றும் அதிலிருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள்