வகைப்படுத்தப்படாத

வடகொரிய தலைவருடன் இரண்டாம் கட்ட சந்திப்புக்கு தயாராகும் டொனால்ட் டிரம்ப்

(UTV|COLOMBO)-உலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா பலமுறை அணு குண்டுகளையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளையும் பரிசோதித்ததால் அமெரிக்காவின் கோபத்திற்கு ஆளாகி பொருளாதார தடைகளை சந்தித்தது.

இதைத்தொடர்ந்து, தென்கொரியா எடுத்த முயற்சியின் பலனாகத்தான் வட, தென் துருவங்கள் போன்று விளங்கி வந்த அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் ஜூன் மாதம் சிங்கப்பூரில் சந்தித்துப் பேசினர்.

அந்த வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பின் போது, கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்ற கிம் ஜாங் அன் உறுதி அளித்து, டிரம்புடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன் பின்னர் அணு ஆயுதங்களை கைவிடுவது தொடர்பான வடகொரியாவின் நடவடிக்கையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்ற போதிலும், அந்த நாடு அணுகுண்டுகளையோ, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையோ சோதித்து பார்க்கவில்லை.

எனினும், அணு ஆயுத ஒழிப்பில் வடகொரியா மெத்தனம் காட்டுவதாக குற்றம்சாட்டிய அமெரிக்கா, அணு ஆயுதத்தை முற்றிலும் ஒழித்த பிறகே வடகொரியா மீதான பொருளாதார தடைகள் விலக்கப்படும் என தெரிவித்தது. ஆனால், நிதானத்தை கடைப்பிடித்த கிம் ஜாங் அன், இம்மாத தொடக்கத்தில் நடைபெற்ற அந்நாட்டின் 70-வது ஆண்டு விழாவில் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகனைகள் மற்றும் அணு ஆயுதங்கள் இல்லாமல் ராணுவ அணிவகுப்பை நடத்தி முடித்தார்.

மேலும், சமீபத்தில் மூன்று நாள் பயணமாக வட கொரியா சென்ற தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னுக்கு சிறப்பான வரவேற்பு அளித்த கிம் ஜாங் அன் அவருடன் மிகவும் நட்புடன் பழகினார். இந்த பயணத்தின் போது டொனால்டு டிரம்ப்புக்கு, கிம் ஜாங் அன் எழுதிய ரகசிய கடிதம் மூன் ஜே இன் வாயிலாக வெள்ளை மாளிகைக்கு கொண்டு சேர்க்கப்பட்டது.

அணு ஆயுதங்களை அழிக்கும் நடவடிகைகளில் தொடர்ந்து கவணம் செலுத்தி வருவதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ள கிம் ஜான் அன், டிரம்ப்பை மீண்டும் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார் என அக்கடிதம் குறித்து வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டது.

இந்நிலையில், கிம் ஜான் அன்னுடன் விரைவில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அதிபர் டொனாடு டிரம்ப் கூறியுள்ளார். நியூயார்க்கில் நடைபெற்று வரும் 73-வது ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தின் போது தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னை சந்தித்து பேசிய பின் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளதாவது :-

இது மிகவும் வித்தியாசமான உலகம், முன்னர் மிகவும் அபாயகரமான சூழல் நிலவியது. ஆனால் ஓர் ஆண்டுக்கு பிறகு காலம் மாறிவிட்டது. அணு ஆயுத அழிப்பில் கிம் காட்டும் அக்கறையால் நான் உற்சாகம் அடைந்துள்ளேன். எங்களுக்கு (டிரம்ப் மற்றும் கிம்) எந்த அவசரமும் இல்லை. யாரும் இதுவரை செயல்படுத்தாததை நாங்கள் செயல்படுத்தி அதில் முன்னேற்றம் கண்டுள்ளோம்.

எங்களுக்கு இடையிலான உறவு அசாதாரணமான வகையில் மிகவும் சிறப்பாக உள்ளது. எங்கள் இருவருக்கும் இடையே கூடிய விரைவில் இரண்டாம் கட்ட சந்திப்பு நடைபெறும்’ என அவர் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பான சட்டம் விரைவில்

அனர்த்தம் தொடர்பாக அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கம்

அலரிமாளிகையில் நவராத்திரி பூஜை