வகைப்படுத்தப்படாத

வடகொரியா ஏவுகணை ஒன்றை வெற்றிகரமாக பரிசோதிப்பு…

(UDHAYAM, NORTH KOREA) – வடகொரியாவினால் ஏவுகணை ஒன்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளதாக வடகொரிய தலைவர் கிம் ஜொங் வுன் தெரிவித்துள்ளார்.

கொரிய அரச ஊடகத்தை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன.

தொலைதூரம் சென்று தாக்கக் கூடிய ஏவுகணை ஒன்றே இவ்வாறு நேற்று சோதனை செய்யப்பட்டது.

இந்த சோதனையானது புதிய வகை முயற்சியாக அமைந்துள்ளதாக வடகொரிய அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

அணு ஆயுத உற்பத்தி, ஏவுகணை பரிசோதனை என்பவற்றிற்கு எதிராக சர்வதேசம், வடகொரியா மீது பல்வேறு அழுத்தங்களை பிரயோகித்து வரும் நிலையில், தொடர்ந்தும் வடகொரியா இவ்வாறான பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

72 வயது மகனை சுட்டுக்கொன்ற 92 வயது தாய்

பிரான்ஸ் பொதுத் தேர்தல் – ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் கட்சியே பெரும்பான்மை ஆசனங்களை கைப்பற்றும் என தெரிவிப்பு

மறைந்த சங்கைக்குரிய பெல்லன்வில விமலரத்ன தேரரின் இறுதிக்கிரியைகள் இன்று