சூடான செய்திகள் 1

வசீம் தாஜூதீனின் மரணம் : வாக்குமூலம் வழங்க வந்தவர் மீது தாக்குதல்

(UTVNEWS | COLOMBO) -றக்பி வீரர் வசீம் தாஜூதீனின் மரணம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க வந்த தம்மீது அதிகாரிகள் சிலர் தாக்கியதாக குணரத்ன பிரதீப் தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தொட்டை மாநகர முதல்வரின் மனைவியின் சகோதரரான குணரத்ன பிரதீப் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,ஏஸ்பி லொக்கு ஹெட்டிகே என்பவரே இந்த தாக்குதலை நடப்பட்டதாக தெரிவித்த அவர் தாஜூதீன் கொலை சம்பவம் தொடர்பில் உரிய வாக்குமூலத்தை வழங்குமாறும் இல்லையேல் தாக்கப்பட்டு சிறையடைக்கப்படுவீர் என தன்னை அச்சுறுத்தியதாக தெரிவித்துள்ளார்.

பின்னர் இந்த விடயத்தை வெளியில் எவருக்கும் கூற வேண்டாம் என கூறிதாக தெரிவித்துள்ளார்.

Related posts

பியல் நிஷாந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை

கைதினை தடுக்க ரவி கருணாநாயக ரீட் மனு தாக்கல்

வரலாற்றில் முதன்முறையாக டெஸ்டில் பெயர்-எண் கூடிய ஜெர்ஸி அறிமுகம்!