உள்நாடு

வசந்த முதலிகே’வை TID இடம் ஒப்படைக்க அறிவுறுத்தல்

(UTV | கொழும்பு) –  அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே மற்றும் இருவரை பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பட்சத்தில் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரிடம் (TID) ஒப்படைக்குமாறு பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இவர்கள் மூவர் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.

இதன்படி, அரச விரோதச் சதி இடம்பெற்றுள்ளதா, பயங்கரவாதச் செயல்களுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்துமாறும், உண்மைகள் வெளிவரும் பட்சத்தில், பயங்கரவாதிகளிடம் விசாரணைகளை ஒப்படைக்குமாறும் பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.

Related posts

விஜயதாச ராஜபக்ஷ அரசியலில் இருந்து ஓய்வு

editor

மேலும் சில பகுதிகள் முடக்கம்

இதுவரை 895 கடற்படையினர் குணமடைந்தனர்