(UTV|கொழும்பு) – முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான வழக்குடன் தொடர்புடைய ஆவணங்களை முன்வைக்க சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் இன்று (27) அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளனர்.
11 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் ஊடாக பழிவாங்கும் நோக்கில் கொழும்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட அண்மையில் ஆணைக்குழுவிடம் தெரிவித்திருந்தார்.
இதற்கமைய சட்டமா அதிபர் திணைக்களத்திடம் உள்ள சகல ஆவணங்களையும் முன்வைக்குமாறு அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு உத்திரவிட்டது.
அதேபோல் இன்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.