சூடான செய்திகள் 1

UPDATE- வசந்த கரன்னாகொட CID இல் ஆஜரானார்

(UTV|COLOMBO) முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட, வாக்குமூலம் வழங்குவதற்காக சற்றுமுன்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.


முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட மீண்டும் இன்று (13) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு குறித்த திணைக்களத்தினால் பணிக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவின்படி நேற்று(11) முன்தினம் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகி இருந்த முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட 09.00 மணியில் இருந்து 5.00 மணி வரையிலான சுமார் 08 மணி நேர வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக குறித்த திணைக்கள வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த சந்தேக நபரை பெயரிட போதுமான சாட்சியங்கள் உள்ளதாக இதற்கு முன்னர் இரகசிய பொலிசார் நீதிமன்றில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

பேராதனை பூங்காவின் வருமானம் 4 கோடி 20 லட்சம் ரூபா

ஹெரோயின் மற்றும் போதை மருந்துகளுடன் 5 பேர் கைது

சபாநாயகர் ஆசனத்தில் இருந்து வௌியேறினார்