கேளிக்கை

லொஸ்லியா தந்தை மரணம் : இலங்கைக்கு உடலை கொண்டு வர நடவடிக்கை

(UTV | கொழும்பு) –  “பிக்பாஸ்” புகழும், தென்னிந்திய திரைப்பட நடிகையுமான லொஸ்லியாவின் தந்தை மரியநேசன், உடல் சுகவீனத்தால் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கனடாவில் வாழ்ந்து வந்த மரியநேசன், நேற்றைய தினம் தனது 52வது வயதில் காலமானார்.
மரியநேசன் மாரடைப்பால் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் அவரது உடலை, தாய்நாடான இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

லொஸ்லியாவின் தந்தை கனடாவில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பம் இலங்கையில் வாழ்ந்து வருகிறது. அதேபோன்று, லொஸ்லியா, தற்போது சென்னையில் வாழ்ந்து வருகின்றார்.

இவ்வாறு ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாடுகளில் இருந்து வருகின்றமையினால், லொஸ்லியாவின் தந்தை மரியநேசனின் பூதவுடலை நாட்டிற்கு கொண்டு வருவதில் சில சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கொவிட் தொற்றுக்கு மத்தியில், பல்வேறு விதிமுறைகளை பின்பற்றி, அவரது உடலை தாயகத்துக்கு கொண்டு வர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, லொஸ்லியாவின் தந்தை உயிரிழந்த தகவல் தொடர்பாக அவரது ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் தங்களுடைய இரங்கலையும் வருத்தத்தையும் பதிவு செய்து வருகின்றனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அழகுக்காக நான் அப்படி செய்யவில்லை

நோபல் பரிசு வென்ற மலாலா யூசுப்சாயிற்கு திருமணம்

காட்டு தீயால் அவதிப்படும் பிரபல நடிகை