சூடான செய்திகள் 1

லொறி விபத்துக்குள்ளாகியதில் இருவர் காயம்

(UTV|NUWARA ELIYAநுவரெலியாவிலிருந்து ருவான்வெல்ல பகுதியை நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த கனரக வாகனமொன்று  அட்டன் நுவரெலியா பிரதான வீதியின் ரதெல்ல குறுக்கு வீதியில் விபத்துக்குள்ளாகியதில் இருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 திங்கட்கிழமை 19.03.2018 மாலை 5 மணியளவில் நுவரெலியாவிலிருந்து ருவான்வெல்ல பகுதியை நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த குறித்த வாகனம் ரதல்ல குறுக்கு வீதியில் சென்றுக்கொண்டிருந்தபோது வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.லொறியில் தடுப்புகட்டை செயலிழந்ததே இந்த விபத்துக்குக் காரணம் என தெரிவித்த நானுஓயா பொலிஸார்  இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் பயணித்த லொறியில் சாரதியும், உதவியாளரும் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிசிச்சை பெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பி.கேதீஸ்

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

பொதுப் போக்குவரத்தை வலுவடையச் செய்ய வேண்டியது போக்குவரத்து அமைச்சரே

பாவனைக்கு பொருத்தமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்த கடைகளுக்கு எதிராக வழக்கு

அரசியல் நெருக்கடிக்கு ஒரே தீர்வு பொதுத் தேர்தலை நடத்துவதேதாகும்