இங்கிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரத்தினபுரி – பானந்துறை வீதியின் திவுல்பத பிரதேசத்தில் இரத்தினபுரி திசையிலிருந்து இங்கிரிய நோக்கி பயணித்த லொறியொன்று வீதியின் குறுக்காக பயணித்த பாதசாரி மீது மோதியுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த பாதசாரி இங்கிரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ஹொரணை மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் இங்கிரிய – அக்கர 20 பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
சடலம் ஹொரணை மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இங்கிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.