சூடான செய்திகள் 1

லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயம்

(UTV|COLOMBO)-திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை நாவலப்பிட்டி பிரதான வீதியில் பத்தனை குயின்ஸ்பெரி தோட்டப்பகுதியில் நேற்று (11) இரவு 10 மணியளவில் டிப்பர் லொறி ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவத்தில் மூவர் படுங்காயமடைந்த நிலையில் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பத்தனை குயின்ஸ்பெரி தோட்டப்பகுதியிலிருந்து நுவரெலியா பகுதிக்கு சேதன பசளை (சாணம்) ஏற்றிச்சென்ற லொறி, குயின்ஸ்பெரி பகுதியில் வாகனத்தை பின்நோக்கி செலுத்தும் போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து டிப்பர் லொறி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

கல்வியியல் கல்லூரிகளுக்கு நிரந்தர பீடாதிபதிகளை நியமிக்க தீர்மானம்

ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

‘கொழும்பு போர்ட் சிட்டி முன்முயற்சி, தெற்காசியாவில் இலங்கையின் தலைமைத்துவத்தை அதிகரிக்கும்’