உள்நாடு

லொறியுடன் நேருக்கு நேர் மோதிய பேருந்து – 22 பேர் காயம்

நிட்டம்புவ – கிரிந்திவெல வீதியில் மணமால வளைவில் இராணுவ சிப்பாய்களை ஏற்றிச் சென்ற பேருந்து எதிர் திசையில் இருந்து வந்த லொறியுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் 22 சிப்பாய்கள் காயமடைந்து வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

காயமடைந்தவர்களில் பேருந்தின் சாரதியும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்களில் 20 பேர் சிகிச்சை பெற்று வௌியேறியுள்ளதுடன், சாரதி மற்றும் மேலும் ஒரு ராணுவ சிப்பாயும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து இன்று (21) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கிரிந்திவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

ராகுல்காந்தியின் மனுவை குஜராத் உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது!

இன்று முதல் புதிய விமான சேவை ஆரம்பம்

2000 கிராம உத்தியோகத்தர்களை சேவையில் இணைக்க நடவடிக்கை