உள்நாடு

லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் 10 மாத குழந்தை உட்பட இருவருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் இரு பிள்ளைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

வைத்தியசாலையில் முதலாம் மற்றும் 21ம் வார்ட்டுக்களில் இருந்த பிள்ளைகளுக்கே இவ்வாறு தொற்று உறுதியாகியுள்ளதாகவும் அவர்கள் ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் ஹரித அழுத்கே தெரிவித்திருந்தார்.

இதில் மினுவாங்கொடை பிரதேசத்தில் வசிக்கும் 10 மாத குழந்தை ஒருவரும் உள்ளடங்குவதாகவும் அவரது தந்தைக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகவும் லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் பணிப்பாளர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 12,482 பேர் மீது வழக்கு

தமிழ் பேசும் மக்களின் வாக்குகளை சிதறடிக்க முகவர்கள் களமிறக்கம் – ரிஷாட் எம்.பி எச்சரிக்கை

editor

மீண்டும் அதிகரிக்கும் ரூபாவின் பெறுமதி – டொலரின் பெறுமதியில் மாற்றம்!