(UTV | கொழும்பு) – லேகியம் போதைப்பொருள் விற்பனை – ஒருவர் கைது !
லேகியம் எனும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை நிந்தவூர் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக லேகியம் எனும் பெயரில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக நேற்று (26) மாலை நிந்தவூர் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய தேடுதலில் ஈடுபட்ட பொலிஸார் சந்தேக நபரை (73 வயது) கைதுசெய்துள்ளனர்.
இதன்போது சந்தேக நபரிடமிருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட ‘லேகியம்’ போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும்,
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களோடு சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிறுத்த நிந்தவூர் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්