வணிகம்

லீனா இஸ்பைரோ தனியார் நிறுவன நடவடிக்கைகள் ஆரம்பம்

(UTV | கொழும்பு) – பன்முகப்படுத்தப்பட்ட நிறுவன குழுமமான சன்ஷைன் ஹோல்டிங்ஸின் ஹெல்த்கெயார் பிரிவான சன்ஷைன் ஹெல்த்கெயார் லங்கா நிறுவனத்தின் (SHL) ஒன்றிணைந்த நிறுவனமான லீனா இஸ்பைரோ தனியார் நிறுவனம் (Lina Spiro (Pvt) Ltd), இலங்கையின் முதலாவது Metered-Dose இன்ஹேலர் (MDI) தயாரிப்பு தொழிற்சாலையை கடவத்தை பிரதேசத்தில் அமைத்து இன்று முதல் நடவடிக்கைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தது.

மருந்துப் பொருள் உற்பத்தி, விநியோகிப்பு மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமனவினால் இந்த தொழிற்சாலை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் இந்த நிகழ்விற்கு சன்ஷைன் ஹோல்டிங்ஸ், அக்மார் பிரதர்ஸ், தேசிய மருந்துப் பொருள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை (NMRA), அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் (SPC), அரச மருந்து தயாரிப்பு கூட்டுத்தாபனம் (SPMC) மற்றும் ஏனைய அரச மற்றும் தனியார் சுகாதார சேவைகள் நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அதி நவீன வசதிகளுடன் கூடிய இந்த தொழிற்சாலையில் தகுதிபெற்ற மற்றும் அனுபவம் உள்ள பல உத்தியோகத்தர்கள் அதில் கடமையாற்றுகின்றனர். சுவாசம் தொடர்பான தயாரிப்புக்கள் அடங்கிய வரிசைகள் இங்கு தயாரிக்கப்படுவதுடன் உலக சுகாதார அமைப்பின் GMP சான்றிதழுடன் இலங்கையில் ஒரேயொரு Metered-Dose இன்ஹேலர் (MDI) தயாரிக்கப்படும் தொழிற்சாலை இதுவாகும்.

பத்து வருடங்களுக்கு மேலாக இந்த துறையில் ஈடுபட்டுள்ள Lina Manufacturin Pvt Ltdஇன் புதிய மருந்து தொழிற்சாலையாக லீனா இஸ்பைரோ நிறுவனம் அமைந்துள்ளது. Lina Manufacturin Pvt Ltd நிறுவனம் அரசாங்கத்திற்கும் மற்றும் தனியார் பிரிவிற்கும் பல்வேறு சுவாசம் தொடர்பான தயாரிப்புக்களை பெரிய அளவில் விநியோகிக்கும் வெற்றிகரமான உள்நாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனமாகும்.

பேடன்ட் சான்றிதழ் கொண்ட நிறுவனத்தின் சுவாசம் தொடர்பான இன்ஹேலர் கருவிகளுடன் நாட்டிற்கு தேவையான சுவாசம் தொடர்பான தயாரிப்புக்களை மேம்படுத்தும் முன்னோடிகளாக லீனா நிறுவனம் கருதப்படுவதுடன் மேலும் தயாரிப்புக்களை அறிமுகப்படுத்துவதற்காக ஆய்வுகள் மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்தும் குறிப்பிடத்தக்க முதலீடுகளையும் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

2020 டிசெம்பர் மாதத்தில் சன்ஷைன் ஹோல்டிங்ஸினால் சன்ஷைன் ஹெல்த்கெயார் லங்கா மற்றும் ஹெல்த்கார்ட் மருந்தகங்கள் வலைப்பின்னலுடன் கூடிய தமது ஹெல்த்கெயார் வர்த்தகம் மற்றும் அக்மார் ஹெல்த்கெயாரின் வர்த்தக பிரிவான அக்பார் ஃபாமசுடிகல்ஸ், Lina Manufacturing மற்றும் லீனா இஸ்பைரோவுடன் மூலோபாய ஒருங்கிணைப்பு குறித்து அறிவித்துள்ளது.

இந்த ஒருங்கிணைப்பிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான தயாரிப்புக்களை உற்பத்தி செய்வதில் இருந்து நாடு முழுவதிலும் மேற்கொள்ளப்படும் இறுதி விநியோகிப்பு வரையான ஐந்து பிரிவுகளினால் உள்ளடக்கப்பட்ட இலங்கையின் முதலாவது சுகாதார சேவை நிறுவனமாக சன்ஷைன்
ஹெல்த்கெயார் திகழ்கின்றது. அதன்படி ஆய்வுகள் மற்றும் மேம்பாடு (R&D), தயாரிப்பு, நிவனம், விநியோகித்தல் மற்றும் வாடிக்கiயாளர் போன்ற சுகாதார சேவை வழங்கும் வலைப்பின்னல் தொடர்பாக

தேவையான அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கி நிறுவனமாக தற்போது நடவடிக்கை
மேற்கொண்டுள்ளது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சன்ஷைன் ஹெல்த்கெயார் லங்காவின் முகாமைத்துவப்பணிப்பாளர் ஷாம் சதாசிவம், ஆரம்பத்திலிருந்து இறுதிவரையான அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கிய இலங்கையின் முதலாவது சுகாதார சேவை நிறுவனமாக சன்ஷைன் ஹெல்த்கெயார் இடம்பிடித்துள்ளமை உண்மையிலேயே முக்கியமான திருப்பு முனையாகும்.

இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கை மூலம் அரசாங்கத்தின் நோக்கங்களுக்கு இசைவாக எமது புதிய தயாரிப்புத் திறன்களை திட்டமிடுவதற்கு உதவியாக அமையுமென நாம் நம்புகின்றோம். அதனூடாக நாட்டிலுள்ள திறமையான இளம் குழுவினருக்கு நிபுணத்துவம் கொண்ட தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுப்பதற்கான பலமான தளமொன்றை உருவாகுவதுடன் நாட்டின் மருந்து இறக்குமதியை குறைப்பதற்கும் முயற்சிக்கப்படும் என தெரிவித்தார்.

தேசிய பொருளாதாரத்திற்கு முக்கியமான பங்களிப்பைப் பெற்றுக் கொடுக்கும் மருந்துத் துறை தொடர்பில் முதலீடு செய்வதற்கு துறையிலுள்ள இரு முன்னணி நிறுவனங்கள் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு இந்த ஒருங்கிணைப்பின் மூலம் நாட்டின் மருந்து தயாரிப்பு அலகும் முன்னோக்கிச் செல்லும். மேலும் அவர்களது வர்த்தக சக்தியை ஒன்று திறட்டுவதனால் ஒருங்கிணைந்த இந்த ஹெலத்கெயார் வியாபாரத்திற்கு மேலும் தயாரிப்பு அலகினை மேம்படுத்துவது போன்றே தற்போதுள்ள மற்றும் புதிய மருந்து கலவை மேம்பாட்டுக்கும் மற்றும் தயாரிப்பின் அளவை அதிகரிப்பதற்கும் பிராந்திய மருந்து நிறுவனங்களுக்கும் இடையில் தொழில்நுட்பத்தை பரிமாறிக் கொள்வதற்கு தூண்டப்படுதல்,

அதேபோன்று ஜனாதிபதியின், “நாட்டை கட்டியெழுப்பும் சௌபாக்கிய எண்ணம்” எனும் தேசிய மருந்து தயாரிப்பின் ஒட்டுமொத்தமாக மேம்படுத்துவதற்கு சந்தர்ப்பம் கிட்டும்.

சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. தொடர்பாக:

சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. என்பது இலங்கையின் பொருளாதாரத்தின் முக்கியத்துறைகளில் – குறிப்பாக சுகாதார மற்றும் நுகர்வோர் துறைகளில், விவசாய வர்த்தகம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகியவற்றில் மூலோபாய முதலீடுகளுடன் மதிப்பை உருவாக்குவதன் மூலம், தேசத்தைக் கட்டியெழுப்ப, பங்களிக்கும் ஒரு பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனமாகும். 2,300க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட குழுமம் என்பதுடன் 21 பில்லியன் ரூபா வருவாயைக் கொண்டுள்ளது.

சன்ஷைன் ஹெல்த்கெயார் லங்கா, இலங்கை வட்டவலைத் தேயிலை, டெய்ன்டீ இனிப்பு வகைகள், ஹெல்த்கார்ட் ஃபமசி, சன்ஷைன் எனர்ஜி மற்றும் வட்டவல பிளான்டேஷன் பி.எல்.சி. ஆகியவற்றை உள்ளடக்கியது, அவை அந்தந்த துறைகளில் முன்னணி நிறுவனங்களாக உள்ளன, 2020இல் “தொழில்புரிவதற்கு சிறந்த நிறுவனங்கள்” என்ற சான்றிதழை அதிலுள்ள பல நிறுவனங்கள் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சன்ஷைன் அறக்கட்டளை சமுதாயத்திற்கு திருப்பித் தரும் குழுவின் சிந்தனையை உறுதிப்படுத்துகிறது, வசதி குறைந்த சமூகங்களுக்கு தூய்மையான நீர் வழங்களுக்கான பல திட்டங்களை செயற்படுத்தியுள்ளது மற்றும் கொவிட்-19 தொற்றுநோயை கட்டுப்படுத்தும் அரச மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்து உபகரணங்கள் மற்றும் உட்கட்டப்பு வசதிகளையும் வழங்கியுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

கிழங்கு வகை உற்பத்தி

உர நிவாரணம் தொடர்பில் புதிய கொள்கை

புதிய 1,000 ரூபா நோட்டு வெளியீடு