உலகம்

லிபியா பிரதமரை கொல்ல முயற்சி

(UTV |  திரிபோலி) – லிபியா நாட்டின் பிரதமராக அப்துல் ஹமீத் அல் திபய்பா (வயது 62) உள்ளார்.

இவர் நேற்று தலைநகர் திரிபோலியில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் அவர் கார் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பினர்.

இந்த கொலை முயற்சியில் அவர் அதிர்ஷ்டவசமாக காயங்கள் இன்றி உயிர் தப்பினார்.

இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லிபியாவில் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அங்கு அரசியல் குழப்பமும் நிலவுகிறது.

Related posts

பிரேசிலில் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து – பத்து பேர் பலி – பலர் காயம்

editor

கடுப்பான தாய்லாந்து பிரதமர்

ஈரானில் 180 பேருடன் பயணித்த விமானம் விபத்து