வகைப்படுத்தப்படாத

லிபியாவில் கார் வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் பலி

(UTV|LIBIYA)-லிபியா நாட்டின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அஜ்டாபியா நகரில் உள்ள அரசு ஆதரவு பாதுகாப்பு படையினரை குறிவைத்து பயங்கரவாதிகள் நேற்று கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.

இந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 8 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து மீட்பு படையினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் பலியான உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், வெடிகுண்டு தாக்குதலில் பலியானவர்களில் பொதுமக்களும், போலீசாரும் அடங்குவார்கள். காயம் அடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிவித்தனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

கடந்த ஜனவரி 22-ம் தேதி லிபியா நாட்டின் பெங்காஷி நகரில் மசூதியில் தொழுகை முடித்து வந்தவர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 22 பேர் பரிதாபமாக பலியாகினர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

அதிக உடல் எடை கூடிய மனிதர்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்

பப்புவா நியூ கினியாவில் பாரிய நில நடுக்கம்

நாடு திரும்பினார் கோட்டாபய