உள்நாடு

லிட்ரோ கேஸ் நிறுவனத் தலைவர் பதவி நீக்கம்

(UTV | கொழும்பு) –  லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் தெசார ஜயசிங்க இன்று (13) பதவியில் இருந்து நீக்கப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா புதிய தலைவராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

எரிவாயு தட்டுப்பாடு மற்றும் எரிவாயு தொடர்பில் நாட்டில் ஏற்பட்டுள்ள பாரதூரமான சூழ்நிலையை கருத்திற்கொண்டு தெசார ஜயசிங்க தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் தலைவர் அனில் கொஸ்வத்த பதவி விலகியதையடுத்து தெசார ஜயசிங்க அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் லிட்ரோ கேஸ் நிறுவனத்துக்கு இரண்டு தலைவர்கள் நியமிக்கப்பட்டதுடன் மூன்றாவது தலைவராக ரேணுகா பெரேரா நியமிக்கப்படவுள்ளார்.

Related posts

ரணிலை கைது செய்யுமாறு கோரிக்கை

ஹிக்கடுவ பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு – இருவர் வைத்தியசாலையில்

editor

கொரோனா பலி எண்ணிக்கை 255 ஆக உயர்வு