விளையாட்டு

லஹிரு குமாரவுக்கு கொரோனா தொற்று

(UTV | கொழும்பு) – மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இடம்பெறவுள்ள கிரிக்கெட் தொடரில் கலந்துகொள்ளவுள்ள இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (21) மேற்கொண்ட பிசிஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

போட்டித் தொடருக்கு செல்லவுள்ள இலங்கை அணி வீரர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

LPL போட்டியில் விளையாட 11 நாடுகளின் வீரர்கள் விருப்பம்

MCC இன் தலைமைப் பதவியை பொறுப்பேற்றார் சங்கக்கார

இலங்கை – தென்னாபிரிக்கா முதலாவது டெஸ்ட் போட்டி இன்று