கேளிக்கை

லண்டன் மியூசியத்தில் தீபிகா படுகோனுக்கு சிலை

(UTV|INDIA)-உலகில் உள்ள பிரபலங்கள் பலரையும் கௌரவிக்கும்  விதமாக மேடம் துஸ்ஸாத்தில் சிலை வைக்கப்படுகிறது. அந்த வகையில் பத்மாவத் படத்தின் மூலம் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த நடிகை தீபிகா படுகோனேவுக்கும் மேடம் துஸ்ஸாத்த்தில் சிலை வைக்கப்படுகிறது.

அதற்காக தனது அளவுகளை கொடுக்க தீபிகா லண்டன் சென்றுள்ளார். அடுத்த ஆண்டு வைக்கப்பட இருக்கும் தனது சிலைக்கான அளவீடுகளை கொடுத்த பின்னர், தீபிகா படுகோனே பேஸ்புக் நேரலையில் பேசினார். அதில் அவர் கூறியதாவது,

´மேடம் துஸ்ஸாத்தில் சிலை வைக்கப்படுவதில் மகிழ்ச்சி. நான் ஒவ்வொரு படத்தையும் ரசிகர்களுக்காக பார்த்து பார்த்து தேர்வு செய்து நடிக்கிறேன். ரசிகர்களும் மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக் கொள்கிறார்கள். நான் சிறு வயதாக இருந்த போது ஒரு முறை எனது பெற்றோருடன் மேடம் துஸ்ஸாத்துக்கு வந்திருக்கிறேன். அந்த நியாபகங்கள் இன்னமும் என் நினைவில் நிற்கின்றன. அப்படி இருக்க மேடம் துஸ்ஸாத்தில் தனது சிலையும் வைக்கப்பட இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது´ என்றார்.

இதற்கு முன்பாக, பாகுபலி நாயகன் பிரபாஸ் மற்றும் கட்டப்பாவாக நடித்த சத்யராஜ் மற்றும் மகேஷ் பாபு உள்ளிட்டோருக்கு மேடம் துஸ்ஸாத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அக்‌ஷரா ஹாசனின் தனிப்பட்ட புகைப்படங்கள் லீக்

பொங்கல் ரேஸில் இணைகிறதா ரஜினியின் ‘பேட்ட’

இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால்