கேளிக்கை

லண்டனில் நிகழ்ச்சி நடத்திய ஸ்ருதிஹாசன்

(UTV|INDIA)-ஸ்ருதிஹாசன் நடிக்க வருவதற்கு முன்பே இசையில் ஆர்வம் கொண்டிருந்தார். சிறு வயதிலிருந்தே பாடல்களைப் பாட ஆரம்பித்த ஸ்ருதி வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சினிமாவில் தொடர்ந்து பாடி வருகிறார். அத்துடன் இசையமைப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

கமல் நடித்த உன்னைப்போல் ஒருவன் படத்துக்கு ஸ்ருதிஹாசன் தான் இசை அமைத்திருந்தார். உலகின் பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சிகள் நடத்தி இருக்கும் ஸ்ருதிஹாசன் முதன்முறையாக லண்டனில் இசை நிகழ்ச்சி நடத்தி இருக்கிறார். நேற்று முன் தினம் நடந்த இந்த இசை நிகழ்ச்சிக்கு பெருதிரளான கூட்டம் வந்தது.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், தானே இசையமைத்து பாடல்களை பாடினார். சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த நிகழ்ச்சியைக் கண்டுகளித்த ரசிகர்கள் கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்தனர். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள ஸ்ருதிஹாசன், அந்நிகழ்ச்சி குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியைக் காண வந்தவர்களுக்கு தனது நன்றியையும் தெரிவித்திருக்கிறார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

மகத்திற்கு வாரிசு

கைமாறும் பமீலா ஆண்டர்சன்

அனுஷ்கா – கோஹ்லி தம்பதியின் குட்டிப் பாப்பா