கேளிக்கை

லண்டனில் காதலனுடன் ஸ்ருதி கொண்டாட்டம்

(UTV|INDIA)-கமல் இயக்கத்தில் அவருடன் இணைந்து சபாஷ் நாயுடு, மற்றும் சுந்தர்.சி இயக்கத்தில் சங்கமித்ரா படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார் ஸ்ருதிஹாசன். கமல் அரசியலில் கவனம் செலுத்தி வருவதால் சபாஷ் நாயுடு படப்பிடிப்பு கிடப்பில் உள்ளது. சங்கமித்ராவை பொறுத்தவரை பட குழுவினருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் அப்படத்திலிருந்து விலகினார் ஸ்ருதி. அதன்பிறகு புதிய படம் எதுவும் ஏற்காமல் இசை ஆல்பம் உருவாக்கம் மற்றும் மேற்கத்திய மேடை பாடல்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

லண்டனை சேர்ந்த மைக்கேல் கோர்சேலுடன் ஸ்ருதிக்கு நட்பு மலர்ந்தது. அது காதலானது. அடிக்கடி லண்டனுக்கு செல்லும் ஸ்ருதி மேக்கேலுடன் இசை ஆல்ப பணிகளில் ஈடுபடுகிறார். மேலும் அவரது குடும்பத்தினருடன் நெருக்கமாக பழகி வருகிறார். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கு 2 நாள் முன்னதாகவே ஸ்ருதி லண்டன் சென்றார். காதலன் மைக்கேல் மற்றும் குடும்பத்தினருடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

தொடர்ந்து புத்தாண்டையும் அவருடன் கொண்டாடி மகிழ்ந்தார். மைக்கேல், ஸ்ருதி இருவரும் பகிரங்கமாகவே டேட்டிங் செய்து வந்தபோதும் காதலை உறுதி செய்யாமல் தவிர்த்து வருகிறார் ஸ்ருதி. புத்தாண்டு தினத்தில் மைக்கேலை கட்டிப்பிடித்து புகைப்படம் எடுத்து அதனை வெளியிட்ட ஸ்ருதி, ‘மைக்கேலுடன் மற்றொரு ஆண்டாக நடக்கும் இந்த கொண்டாட்டம் மகிழ்ச்சியின் எல்லையை தொட்டது’ என குறிப்பிட்டிருக்கிறார்.

 

 

 

 

 

Related posts

அந்த ஹீரோவால் தான் இங்க இருக்கேன் – ரியோ [PHOTO]

இவர் யாரென்று தெரிகிறதா? லேட்டஸ்ட் லுக்கில் கலக்கும் பிரபல நடிகை

ஐஸ்வர்யாராய் – அபிஷேக் பச்சன் இடையே மோதலா?