விளையாட்டு

லசித் மாலிங்க தொடர்பில் சச்சின் புகழாரம்!!

(UDHAYAM, COLOMBO) – நேற்று இடம்பெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி பூனே சுப்பர் ஜியன்ட் அணியை ஒரு ஓட்ட வித்தியாசத்தில் வீழ்த்தி ஐபிஎல் கிண்ணத்தை மூன்றாவது முறையாகவும் சுவீகரித்துக்கொண்டது.

இந்நிலையில் , நேற்றைய போட்டி தொடர்பில் இந்தியாவின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்திருந்தார்.

அற்புதமான போட்டி. முதல் பாதி எங்களுக்கு சிறப்பாக அமையவில்லை. இடைவேளையின் போது கலந்துரையாடினோம்.

எம்மால் இந்த போட்டியை வெற்றி கொள்ள முடியும் என நம்பினோம்.கடந்த சில வருடங்களாக மாலிங்க எமது அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார்.எனக்கு நம்பிக்கை இருந்தது இன்றைய இரவில் அவர் ஏதாவது நிகழ்த்துவார் என்று. அவருக்கு கடந்த காலம் சிறப்பாக அமையவில்லை. எனினும் மாலிங்கவால் ஒரு ஓவரில் கூட போட்டியை மாற்ற முடியும். இவ்வாறு சச்சின் டெண்டுல்கர் தெரிவித்திருந்தார்.

[ot-video][/ot-video]

Related posts

இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நியூசிலாந்து

நமீபியாவிற்கு குவியும் பல பாராட்டுக்கள்

ஆசிய கிண்ணம்: இன்று பங்களாதேஷ் – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகிறது