அரசியல்உள்நாடு

லசந்த விக்ரமதுங்கவின் கொலையாளிகள் யார் என்பதை அரசாங்கம் உடனடியாக வெளிக்கொணர வேண்டும் – சஜித்

லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து நான் கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் திகதி பிரதமரிடம் கேள்வி எழுப்பியிருந்தேன்.

இத்தகைய தருணத்தில், இது தொடர்பாக அண்மைக்காலமாக அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் என்ன? மற்றும் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பில் அரசாங்கம் தலையிட்டு வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பாக வெளிப்படையான விசாரணையை நடத்தி, அவர்களது குடும்பத்தினருக்கும் ஊடகவியலாளர்களுக்கும் நீதி நியாத்தை நிலைநாட்டி, கொலையாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுங்கள்.

லசந்த விக்ரமதுங்கவின் கொலையாளிகளை கண்டுபிடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

Related posts

இலங்கையில் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் இந்திய கல்லூரி!

இலங்கைக்கு வந்துள்ள IMF பிரதிநிதிகள் குழு!

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று