சூடான செய்திகள் 1

லக்ஷமன் கதிர்காமர் கொலை தொடர்பில் சந்தேக நபர் கைது

(UTV|COLOMBO)-முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷமன் கதிர்காமரின் கொலை சம்பவம் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவர் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

39 வயதான நவநீதன் எனும் குறித்த நபர் தென் ஜேர்மனில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

2005 ஆம் ஆண்டு முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்டார்.

மேலும் கைது செய்யப்பட்ட நபர் ஈ.பி.டி.பி கட்சியின் டக்ளஸ் தேவானந்தாவை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருந்ததாகவும் ஜேர்மனிய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 

 

 

 

 

 

 

Related posts

அனைத்து பல்கலைக்கழகங்களினதும் பரீட்சைகள் இரத்து

ஹெரோயினுடன் ஒருவர் கைது

ஆளுநரின் ஒருங்கிணைப்பாளர் பதவிகளை பொறுப்பேற்க கூடாது : SLMC செயலாளர் நாயகம் கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல்