உலகம்

ரோஹிங்கியா மக்களை மியன்மார் அரசு பாதுகாக்க வேண்டும்

(UTV|ரோஹிங்கியா ) – மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களின் இனப்படுகொலையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் தொடர்பாக கடந்த மாதம் சர்வதேச நீதிமன்றத்தில் மியான்மரின் நடைமுறைத் தலைவர் ஆங் சான் சூச்சி நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு மியான்மரில் எடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின்போது ஆயிரக்கணக்கான ரோஹிங்கியாக்கள் கொல்லப்பட்டதுடன், 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வங்க தேசத்துக்கு தப்பிச்சென்றனர்.

இதற்கிடையில், இந்த இனப்படுகொலை தொடர்பாக நெதர்லாந்தில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது ரோஹிங்கியா முஸ்லிம்கள் மியான்மரில் மிகுந்த பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். ஆகையால், ரோஹிங்கியா முஸ்லிம்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மியான்மர் அரசு எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்

Related posts

ஜெர்மனியில் மூன்றாவது அலை : பொதுமுடக்கம் அமுலுக்கு

டிக் டாக் செயலியின் தடை நீக்கம்

அமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை