கேளிக்கை

ரோஜா 2 குறித்து மணிரத்னம் தரப்பு விளக்கம்

(UTV|கொழும்பு)- ரோஜா படத்தின் 2-ம் பாகத்தை மணிரத்னம் இயக்க உள்ளதாக வெளியான செய்திகள் குறித்து மணிரத்னம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

1992 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய ரோஜா படம் வெளியாகி வெற்றி பெற்றது. இதில் அரவிந்தசாமி, மதுபாலா ஜோடியாக நடித்து இருந்தனர். இப்படத்தின்முலம் தான் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

இந்த நிலையில் ரோஜா படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதையை மணிரத்னம் தயார் செய்து இருப்பதாகவும் இந்த படத்தில் அரவிந்தசாமி கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால் இந்த செய்தியை மணிரத்னம் தரப்பு மறுத்துள்ளது. ‘பொன்னியின் செல்வன்’ மணிரத்னம் அவர்களுடைய கனவுப்படம். அந்தப் படத்துக்கு முன் வேறு எந்த படத்தை அவர் இயக்க திட்டமிடவில்லை. எனக்கூறி அவர்கள் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

Related posts

திருமண வரவேற்புக்கு வந்து வாழ்த்திய பிரதமர் மோடிக்கு பிரியங்கா சோப்ரா நன்றி

காப்பான் படத்தில் சூப்பர் ஸ்டாரை தாக்கி வசனம்? (VIDEO)

ஹாரிபாட்டர் நடிகர் திடீர் மரணம்