விளையாட்டு

ரோஜர் பெடரர் காலிறுதிக்கு முன்னேற்றம்

(UTV|GERMANY)-ஸ்டுட்கார்ட் ஓபன் டென்னிஸ் ஜெர்மனியில் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது சுற்று ஆட்டத்தில் முதல்நிலை வீரரான ரோஜர் பெடரர், ஜெர்மனியின் மிஸ்கா ஸ்வரேவ்வை எதிர்கொண்டார்.

இப்போட்டியின் முதல் செட்டை ஸ்வரேவ் 6-3 என கைப்பற்றினார். அதன்பின் பெடரர் சுதாரித்துகொண்டு சிறப்பாக விளையாடினார். அவர் அடுத்த இரண்டு செட்களையும் 6-4, 6-2 என கைப்பற்றினார். இதன்மூலம் 3-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் பெடரர் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு இரண்டாவது சுற்று ஆட்டத்தில் இரண்டாம் நிலை வீரரான லூகாஸ் பவுல்லி, ஜெர்மனியின் ருடோல்ப் மோலேகர் உடன் மோதினார். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய பவுல்லி 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

அடுத்த வாரம் தேசிய கனிஷ்ட மெய்வாண்மை போட்டி ஆரம்பம்

சானியா மிர்சா சாதிப்பாரா?

இலங்கை வீரர்கள் மைதானத்தினுள் மோட்டார் சைக்கிளில் சறுக்கி வீழ்ந்து விபத்து (video)