வகைப்படுத்தப்படாத

ரெக்ஸ் தில்லர்சன்னை பதவி நீக்கிய டொனால்ட் ட்ரம்ப்

(UTV|AMERICA)-வடகொரியாவின் அணுவாயுத சவால்கள் குறித்த விடயங்களை கையாளும் விடயத்தில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முன்னாள் ராஜாங்க செயலாளர் ரெக்ஸ் தில்லர்சன்னை பதவி நீக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

தகவல் அறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி, ரொயிட்டர்ஸ் செய்தி சேவை இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் ராஜாங்க செயலாளராக இருந்த ரெக்ஸ்தில்லர்சன், திடீரென பதவி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சீ.ஐ.ஏயின் பணிப்பாளராக இருந்த மைக் பொம்பே நியமிக்கப்பட்டார்.

இதற்கான காரணம் இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

எனினும் வடகொரியாவின் தலைவர் கிம் ஜொங் உன்னை சந்திக்கும் விடயத்தில் ஏற்பட்ட நம்பிக்கையற்றத் தன்மை காரணமாக, தில்லர்சன்னை ட்ரம்ப் பதவி நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்திப்புக்கு முன்னர், தமக்கு நம்பிக்கையான அதிகாரிகள் குழு ஒன்றை உருவாக்குவதற்கு டொனால்ட் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.

இதன்படியே இந்த பதவி நீக்கம் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

 

Related posts

வவுனியாவில் மோட்டார் குண்டுகள் மீட்பு

Several Ruhuna Univeristy faculties reopen today

Kyoto Animation fire: Arson attack at Japan anime studio kills 33