வகைப்படுத்தப்படாத

ரூ.2 கோடி பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது

(UTV|PUTTALAM)-சிலாபம் – கருப்பன் கடற்பகுதியில் சுமார் இரண்டு கோடி பெறுமதியுடைய ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கலால் திணைக்கள அதிகாரிகள் நேற்று இரவு மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே அவர் கைதாகியுள்ளதாக, தெரியவந்துள்ளது.

மேலும், இதன்போது சுமார் இரண்டு கிலோ கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இவை இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும், கலால் அதிகாரி எஸ்.கே.வனிகதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

சந்தேகநபர் சிலாபம் – கொலணியவெல்ல பகுதியைச் சேர்ந்த 39 வயதான ஒருவராகும்.

இவரை சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related posts

European Parliament opens amid protest and discord

தலாய்லாமாவை துப்பாக்கியுடன் நெருங்கிய பாதுகாவலர்

அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க தயாராகும் சீனா