உள்நாடு

ரூ.1000 சம்பள அதிகரிப்பு வர்த்தமானி வெளியானது

(UTV | கொழும்பு) – தேயிலை மற்றும் இறப்பர் தொழில்துறை சார் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியம் 1000 ரூபாய் என அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் தொழில் அமைச்சரின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 5ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

சம்பள நிர்ணய சபையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, குறைந்த பட்ச நாளாந்த சம்பளம் 900 ரூபாயாகும்.

அத்துடன், வரவு – செலவுத் திட்ட கொடுப்பனவான 100 ரூபாயும் சேர்த்து நாளாந்த ஊதியம் 1000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No description available.

No description available.

Related posts

இன்று இரவு முதல் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் ரூ.34

குளவி கொட்டுக்கு இலக்காகி 14 பேர் வைத்தியசாலையில்

முச்சக்கர வண்டிகளுக்கான மீட்டர் பொருத்தும் நடவடிக்கை ஒத்திவைப்பு