வகைப்படுத்தப்படாத

ரூபாய் 77 லட்சம் கொள்ளையிட்ட சந்தேக நபர்கள் சிக்கினர்

(UDHAYAM, COLOMBO) – கடவத்தையில் உள்ள ஆடைக் கண்காட்சி நிலையம் ஒன்றில் நடத்தப்பட்ட கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல இடங்களில் வைத்து நேற்று இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை பேச்சாளர் ரூவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

அவர்கள் கொள்ளையிடுவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ள துப்பாக்கி மற்றும் மேலும் பல பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், அவை தற்போது பேலியகொட காவற்துறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடந்த 26 ஆம் திகதி ராகம பகுதில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றது.

இதன்போது 77 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அமெரிக்காவில் கடும் வெப்பம்

100 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்தில் சிக்கியது

கடுகதி ரயில் தடம்புரண்ட விபத்தில் 18 பேர் உயிரிழப்பு