உள்நாடு

ருஹுணு குமாரி தடம் புரள்வு

(UTV | கொழும்பு) – ருஹுணு குமாரி கடுகதி புகையிரதம் தடம் புரண்டதால் கரையோரப் பாதையில் ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

பெலியத்தையில் இருந்து மருதானை நோக்கி பயணித்த புகையிரதமே இன்று (15) காலை பூஸ்ஸ பகுதியில் தடம் புரண்டுள்ளது.

இதன் காரணமாக கொழும்பில் இருந்து ஹிக்கடுவை வரை புகையிரதங்களை மட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அந்த வழித்தடத்தில் ஓடும் ரயிலை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து தீவிர பிரச்சாரம்

editor

ட்ரம்ப் கூறியதை செய்து விட்டார் – 3 மாதங்கள் கடந்தும் இலங்கையில் என்ன நடந்தது? – ஹர்ஷ டி சில்வா எம்.பி

editor

வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பு டிச. 08