உள்நாடு

ருஷ்தி புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டியவர் என ஜம்மியதுல் உலமா கூறியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்தி மனதுங்க தெரிவிப்பு

பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மொஹமட் ருஷ்டி புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டியவர் என ஜம்மியதுல் உலமா சபை தெரிவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்தி மனதுங்க தெரிவித்துள்ளதாக பிபிசி சிங்கள சேவை தகவல் வெளியிட்டுள்ளது.

ருஷ்டியின் கைது விவகாரம் தொடர்பில் பிபிசிக்கு கருத்து வெளியிட்டுள்ள பொலிஸ் ஊடப்பேச்சாளர்,

ஸ்டிக்கர் ஒட்டியதற்காகவே அவரை கைது செய்ப்படவில்லை. அவரை விசாரிக்கும்போது, அவர் அடிப்படைவாத கொள்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளர் என எங்களுக்குத் தெளிவானது.

இலங்கையின் பல இடங்களிலும் இத்தகைய ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

இதனால் அவரைப் பற்றிய விசாரணையை தீவிரமாக மேற்கொண்டோம். விசாரணையின் முடிவில், அவர் தீவிரவாத நோக்கங்களைக் கொண்டவராக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டதால் கைது செய்யப்பட்டது, எனப் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறினார்.

மேலும் கருத்து வெளியிட்டுள்ள பொலிஸ் ஊடகப்பேச்சாளர்.

“இவர் உலமா சபையில் முன்னிலைப்படுத்தட்டார் பின்னர் உலமா சபை உண்மையில் அவர் ஒரு சாதாரண முஸ்லிமின் நிலையைத் தாண்டிய நிலை இருப்பதாகவும், அவர் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும் என்றும் கூறினர்,” என்று அவர் மேலும் கூறினார்.

தற்போது தீவிரவாத விசாரணைப் பிரிவில் (TID) அவரை 90 நாட்கள் வரை தடுப்புக் காவலில் வைத்திருக்க PTA சட்டத்தின் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

Related posts

நாடாளாவிய ரீதியில் நாளை முதல் விசேட போக்குவரத்து சோதனை

editor

டுபாயில் இருந்த 197 பேர் நாடு திரும்பினர்

அஸ்வெசும கொடுப்பனவு பெறுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!