உலகம்

ருமேனியா தீ விபத்தில் 10 பேர் பலி

(UTV | ருமேனியா) – ருமேனியாவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வைத்தியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 10 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ருமேனியாவின் வடகிழக்கு பகுதியின் Piatra Neamt நகரிலுள்ள பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவிலே இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்த வைத்தியர் உள்ளிட்ட பலர் தீக்காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

காஸாவில் இஸ்ரேல் தொடர்ந்தும் வான்வெளி தாக்குதல்

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

சீனாவில் பாரிய நிலநடுக்கம்