உள்நாடு

ரிஷாத் விரும்பினால் சபைக்கு வரலாம்

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாத் பதியுதீன் மற்றும் பிரேமலால் ஜயசேகர ஆகியோர் விரும்பினால் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள சபாநாயகர் அனுமதி அளித்துள்ளார்.

இது தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்திற்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற படைக்கள சேவிதர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கடந்த ஏப்ரல் மாதம் 24ம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு 3 மாத தடுப்பு காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

அதேபோல், கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தினால் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட பிரேமலால் ஜயசேகரவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தியத்தலாவை கோர விபத்து : சாரதிகள் கைது

தனிமைப்படுத்தலில் இருந்து இதுவரை 7515 பேர் வீட்டிற்கு

அரசியல் அடக்குமுறை தொடர்பான குழு அறிக்கை பிரதமருக்கு